சஹஜ தியானம் என்பது என்ன ?

சஹஜ யோகா அனுபவத்தை அடிப்படையாக கொண்ட ஒப்பற்ற தியான முறையாகும், அதுவே ஆன்ம உணர்வு (குண்டலினி விழிப்புணர்வு) என்பதாகும். ஒவ்வொரு மனிதனிடத்தில் அது நேரிட வாய்ப்பு இருக்கிறது. இந்தத் தியான முறையால் மனித விழிப்புணர்வு வளர்ச்சி ஒரு திருப்புமுனை ஏற்படுத்தியுள்ளது.

சஹஜ யோகம் மிக சுலபமானது. ஆனால் மிக அரிய உயர்ந்த விளைவுகளைத் தரவல்லது. ஸ்ரீ அன்னையின் அருளாசியால், நமது உள்ளங்கைகளிலும் உச்சந்தலையிலும் குளிர்ச்சியான நுண்ணதிர்வுகளை உணர முடியும்

ஸ்ரீ அன்னை இந்த யோகா முறையை வீட்டிலும், அலுவலகத்திலும், தொழிற்கூடங்களிலும், விவசாயப் பண்ணைகளிலும், எங்கும் அமர்ந்து தியானம் செய்யலாம். உங்கள் அனைவர்க்கும் பயன்தரும் முறையில் அழகுற அமைந்துள்ளார். அதனால் 150 வெளிநாடுகளிலுள்ள ஆயிரக்கணக்கான அன்பர்கள் பயன்பெற்றுள்ளனர். இதைப் பயிற்சியும் செய்கின்றனர்.