சூட்சும மண்டலம்

தாயின் வயிற்றில் வளரும் கருவானது 2 அல்லது 3 மாதங்கலாகும் பொழுது எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளின் சைதன்யம் எனும் ஒளிக்கதிர்கள், கருவின் மூளையின் வழியாக உடலினுள் புகுந்து 4 வெவ்வேறு நாடிகளின் மூலம் 6 சக்கரங்களின் வழியாகச் சென்று முடுகெலிம்பின் கீழ் அமைந்துள்ள முக்கோண வடிவமுள்ள எலும்பின் மத்திய பாகத்தில் 3 1/2 சுருளாக அமைதியாக உறைகிறது. ஆதி சக்தியின் ஒரு துளியான இந்தச் சக்தியின் பெயர்தான் குண்டலினி என்பதாகும்.

இந்த குண்டலினி தான் ஒருவருடைய தனிப்பட்ட தாயாகும். இந்த உயிர்ச்சக்தி தன்னையே அமைத்துக் கொள்ளும் சுய அமைப்பு, தன்னையே புதுப்பித்து வளர்த்துக் கொள்ளும் சுய அமைப்பு, தன்னைத் தானாகவே மேலே செல்லக் கூடிய சுய அமைப்பு ஆகியன உடையதாகும். இது மனோ, வாக்கு, காயங்களுக்கும், காலத்திற்கும், இடத்திற்கும், காரண, காரியத்திற்கும் அப்பாற்பட்டதாகும்.
இந்த உறங்கிக்கிடக்கின்ற சக்தி, தன்னை சாதகன் எப்பொழுது விழிப்புணரச் செய்வான் என்று ஆவலோடு எதிர்பார்த்துப் பொருமையாக காத்துக் கொண்டிருக்கிறது. இந்த குண்டலினி சக்தியை விழிப்புணரச் செய்து ஜீவாத்மாவையும் பரமாத்மாவையும் ஐக்கியமாக்குவதே சகஜ யோகம் என்பதாகும்.

அன்னை அமைத்த சகஜ யோகத்தின் நற்பயன் களின் விளைவாக மூலாதார்த்தில் அமைதியாக உறங்கிக் கிடந்த குண்டலினி சக்தியை, சுழுமுனை நாடி மூலம், 5 நுண்ணிய சக்கரங்களின் வழியாக தன்னுடைய நுழைவாயில் அதாவது சகஸ்ரார சக்கரத்தை அடைய முடிகிறது. அந்த பரம்பொருளிடமிருந்து அவதரித்து உதித்த தொடர்பு ஞாபகம் இல்லாமல் மறந்து போனதோ அது மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. குழந்தையின் குறுகிய பார்வை மறைந்து விடுகிறது. குண்டலினியை விழிப்புணரச் செய்ததன் மூலம் ஆத்ம ஞானம் பெற்ற குழந்தையின் பார்வை மிகவும் விசாலமாகி விடுகிறது.
இதன் பயனாக குழந்தை இந்த உலகத்தை ஒரு உண்மையான கண்ணோட்டத்துடன் பார்க்கத் தொடங்குகிறது. உலகம் முழுகதும் பரம்பொருளின் ஒரு கூட்டு அமைப்பு என்பதனையும் அதில் ஒரு சிறு துளி அங்கமாக 'நான்' காணப்படுகின்றேன் என்ற பூரண மெய்ய்யறிவையும் உணர்ந்து மகிழ்கிறது. இதுவே மெய் ஞானத்தை உணருதல் என்பதாகும்.